Advertisment

பொறியியல் கலந்தாய்வுக்கான தேதி அட்டவணை வெளியீடு!

Engineering Consultation Date Schedule Released!

பொறியியல் படிப்புகளில் சேருவதற்காக பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 25- ஆம் தேதி தொடங்க உள்ளதாக தமிழ்நாடு உயர்கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Advertisment

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் பிஇ மற்றும் பி.டெக் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நிறைவுபெற்றுள்ளது. இந்தாண்டு பொறியியல் படிப்புகளுக்காக சுமார் 2.50 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம் செய்திருக்கின்றனர். அவர்களுக்கான கலந்தாய்வு தேதியை உயர்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

Advertisment

அதன்படி, பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வரும் ஆகஸ்ட் 16- ஆம் தேதி அன்று வெளியிடப்படும். சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 20- ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 23- ஆம் தேதி வரை நடைபெறும். பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 25- ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 21- ஆம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடைபெறும். அதைத் தொடர்ந்து, அக்டோபர் 22, 23 ஆகிய தேதிகளில் பொறியியல் துணைக் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

வரும் அக்டோபர் மாதம் 24- ஆம் தேதியுடன் அனைத்து வகையான கலந்தாய்வும் நிறைவுபெறும் என்றும், உயர்கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

students Tamilnadu Engineering
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe