The engineer who gave everything he asked for! Digital robbery that rolled in millions!

Advertisment

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பிரகாஷ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாராம் (53). இவர், பெல் நிறுவனத்தில் கூடுதல் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அவரது கைபேசிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. அதில், ஒரு மர்ம நபர் தான் பிரபல பொதுத்துறை வங்கியில் குறிப்பிட்ட செயலியில் பணியாற்றுவதாக கூறி அறிமுகமாகியுள்ளார். தொடர்ந்து வங்கித் தொடர்பாக பேசி, ராஜாராமின் வங்கி கணக்கு எண், ஆதார் எண், பான் எண், ரகசிய எண் உள்ளிட்ட அனைத்தையும் அந்த மர்ம நபர் வாங்கியுள்ளார். அதன்மூலம், ராஜாராம் வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 1 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துள்ளார். இது குறித்து ராஜாராம் சைபர் க்ரைமில் புகார் கொடுத்தார். கொடுத்த புகாரின் அடிப்படையில் சைபர் பிரிவு அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.