Advertisment

‘வேலையும் கிடைக்கல கல்யாணமும் நடக்கல...’ - என்ஜினீயரிங் பட்டதாரி எடுத்த விபரீத முடிவு 

Engineer lost their life in frustration of not getting a job

ஈரோடுகாசியண்ணன் வீதியைச் சேர்ந்தவர் அர்ஜுனன் (60). ஜெனரேட்டர் மெக்கானிக். இவரது மகன் மகேஷ்வரன் (28). பி.இ. படித்துள்ளார். இவரது படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் வீட்டிலேயேஆன்லைன் மூலமாக 3டி அனிமேஷன் வேலை செய்துஅதில் வரும் சொற்ப வருமானத்தில் வாழ்ந்து வந்துள்ளார்.

Advertisment

மேலும், தன்னுடன் படித்த நண்பர்கள் எல்லாம்நல்ல வேலை, திருமணம் என செட்டிலாகிவிட தனக்கு 28 வயதாகியும் இன்னும் திருமணமாகாமல், படிப்புக்கேற்ற வேலை இல்லாமல் இருக்கிறோமேஎனப் புலம்பி வந்துள்ளார். இதனால், வீட்டில் இருப்பவர்களிடமும் சரிவரப் பேசாமல் இருந்து வந்துள்ளார்.

Advertisment

இந்த நிலையில்,வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மகேஷ்வரன் தூக்கிட்டுத்தற்கொலைக்கு முயன்றுள்ளார். மதியம் வீடு திரும்பிய மகேஷ்வரனின் தாயார் மகன் தூக்குப் போட்டுத்தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மகனை மீட்டு ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே மகேஷ்வரன் இறந்துவிட்டதாகக் கூறினார். இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ENGINEER Erode
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe