corona

விழுப்புரம் அருகிலுள்ள கிராமத்தில் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டபொறியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

Advertisment

விழுப்புரம் அருகே உள்ளதென்னம்மா தேவி கிராமத்தை சேர்ந்தவர் மும்மூர்த்தி என்பவரின்மகன்ஜெயக்குமார் (25) காஞ்சிபுரத்தில் உள்ள ஒருதனியார் நிறுவனத்தில் சிவில் இன்ஜினியர் ஆக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த ஜூலை 13ம் தேதி காஞ்சிபுரத்தில் இவருடன் தங்கி பணிபுரிந்து வந்த இவரது நண்பர் ஒருவருக்குகரானா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisment

இதையடுத்து ஜெயக்குமாருக்கு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு அவர்தன் சொந்த ஊரான தென்னம்மா தேவிக்கு வந்து வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அவருக்கும் கரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்ததகவலைஅரசு மருத்துவமனையில் இருந்து ஜெயக்குமாருக்கு தெரிவித்துள்ளனர்.

Advertisment

இதனால் மனமுடைந்த ஜெயக்குமார் அன்றே தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்த விழுப்புரம் தாலுகா உதவி ஆய்வாளர்பிரபு மற்றும் சுகாதார ஊழியர்கள் ஜெயக்குமாரின் உடலை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவரது உடல் விழுப்புரம் நகராட்சி முக்தி மின் தகன மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர் .