Advertisment

இன்ஜினியர் கொலை வழக்கு: தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் சரண்..!  

Engineer  case; The culprits who were in hiding surrender

Advertisment

திருச்சி, லால்குடி அருகே உள்ள திருமங்கலம் கிராமத்தில் வசித்து வந்த கிருபன் ராஜ், சென்னையில் உள்ள பாதுகாப்பு நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். இவருடைய தங்கைக்கும் அவருடைய நெருங்கிய நண்பரான கவியரசனுக்கும் இடையே காதல் மலர்ந்து, இருவருடைய வீட்டிற்கும் தெரியாமல் திருமணமும் நடந்துள்ளது.

ஆனால், அதில் விருப்பமில்லாத கிருபன் ராஜ், தன்னுடைய தங்கைக்கு வேறு ஒரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளார். இதனால் கிருபன் ராஜுக்கும் அவரது நெருங்கிய நண்பரான கவியரசனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு, முன்விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னையிலிருந்து வீட்டிற்கு வந்த கிருபன் ராஜ், தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் கவியரசன் வீட்டைக் கடந்து செல்லும்போது, கவியரசன் அவரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், அவருடைய இரு சகோதரர்களும் கிருபன் ராஜிடம் சண்டையிட்டுள்ளனர்.

Advertisment

அப்போது கவியரசன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கிருபன் ராஜை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் கிருபன் ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவுசெய்த காவல்துறையினர், கவியரசன் மற்றும் அவருடைய சகோதரர்களைத் தேடி வந்தனர்.

இந்நிலையில், சமயபுரம் காவல் நிலையத்தில் கவியரசன் மற்றும் அவரது தம்பி கலைவாணன் இருவரும் சரணடைந்துள்ளனர். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள நிவாஸை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ENGINEER trichy
இதையும் படியுங்கள்
Subscribe