/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_2174.jpg)
விழுப்புரத்தை ஒட்டி உள்ள தேவநாத சாமி நகரில் கார்த்திகேயன்(35) என்பவர் வசித்துவருகிறார். இவர், சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் சாப்ட்வேர் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இதற்கிடையே கடந்த 15ஆம் தேதி செங்கல்பட்டில் உள்ள ஒரு பெண்ணைப் பார்த்து இவரது பெற்றோர்கள் திருமணம் செய்வதற்கு நிச்சயதார்த்தம் நடத்தியுள்ளனர்.
நிச்சயதார்த்தம் நடந்த சிறிது நாட்களுக்கு பிறகு பொறியாளர் கார்த்திக் வீட்டைவிட்டு மாயமானார். இதுகுறித்து அவரது பெற்றோர் பல்வேறு இடங்களுக்குச் சென்று தேடியுள்ளனர். அவருக்கு நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடியும் கார்த்திக் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தந்தை பிரபு, பலவளவனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
போலீசார், மாயமான மாப்பிள்ளை கார்த்திக் குறித்து வழக்குப்பதிவு செய்து அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட நிலையில் மாப்பிள்ளை திடீரென்று காணாமல் போயிருப்பது அவரது உறவினர்கள் மத்தியிலும், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)