Enforcers raid places related to Minister Senthil Balaji

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

Advertisment

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாகச் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் உயர்நீதிமன்ற அனுமதியோடு சென்னை காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து புழல் சிறையில் நீதிமன்ற காவலில் இருந்து வருகிறார்.

Advertisment

இந்நிலையில் சென்னை, திருச்சி உள்ளிட்ட 10 இடங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் குடும்பத்தினருடன் தொழில் ரீதியாக தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் திண்டுக்கல்லில் தொழிலதிபர் ரத்தினம், உறவினர் கோவிந்தன் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கோவிந்தன் மணல் குவாரி, பெட்ரோல் பஙக், ரியல் எஸ்டேட் தொழில்களை செய்து வருகிறார்.

புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினத்தில் தொழிலதிபர் இராமச்சந்திரன் அலுவலகத்திலும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ராமச்சந்திரன் என்பவர் வீட்டிலும் 5 பேர் கொண்ட அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு இன்றுடன் 3 மாதங்கள் நிறைவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.