Enforcers raid in Chennai

Advertisment

சென்னையில் 13 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் ஜேம்ஸ் வால்டர் என்பவருக்கு சொந்தமானஏற்றுமதி நிறுவனம் தொடர்பான 13 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி மேற்கு தாம்பரம், வேளச்சேரி, சோழிங்கநல்லூர், அமைந்தகரை, கோடம்பாக்கம் உள்ளிட்ட 13 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 225 கோடி ரூபாய்நிதிமோசடி செய்ததாக சிபிஐ பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.