Enforcement raid in Chennai

சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை அபிராமபுரத்தில் அமைந்துள்ள பிரபல தொழிலதிபரின் மகள் ஆண்டாள் என்பவரின் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று (31.01.2025) காலை 7 மணி முதல் இந்த சோதனை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக வருமான வரித்துறை அதிகாரிகள் அளித்த தகவலின் பேரில் சோதனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

அதாவது சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக இந்த சோதனை நடந்து வருவதாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் முழுமையான சோதனைக்கு பிறகே, உண்மையான காரணம் தெரியவர வாய்ப்புள்ளது. சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.