/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1000_10.jpg)
சென்னையில் அமைச்சர் இல்லம் உள்பட 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள்சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கரூரில் உள்ள அவரதுஇல்லங்களில் மத்திய துணைராணுவப் படையினர் பாதுகாப்புடன்அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. 5 வாகனங்களில் வந்த 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதே நேரம்அவரது சகோதரர்அசோக் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் உள்ள அமைச்சரின் அரசு இல்லம், ஆர்.ஏ.புரம், அபிராமபுரத்தில்உள்ள இல்லங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1001_33.jpg)
அதேபோன்று கரூரில் உள்ள அமைச்சரின் வீட்டிலும் சோதனையானது நடைபெற்று வருகிறது. கரூரில் 5 வாகனங்களில் வந்த பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் மத்திய துணை ராணுவப் படை வீரர்களின்பாதுகாப்புடன் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். முந்தையஅதிமுக ஆட்சியின்போதுபோக்குவரத்துக் கழகப்பணி நியமனங்களில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில் இந்த சோதனை நடைபெற்று வருவதாகத்தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே வருமான வரித்துறை சோதனை நடத்தியநிலையில் தற்போதுஅமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)