சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை கே.கே. நகர், வேப்பேரி, நுங்கம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சுமார் 50 அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பாக இந்த சோதனை நடந்து வருவதாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இதே போன்று சென்னையின் புறநகர் பகுதிகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 10 க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் துணை ரானுவத்தினர் பாதுகாப்புடன் இந்த சோதனையை நடத்தி வருகின்றனர். அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.