nn

அதிமுக ஆட்சிக் காலத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்த விராலிமலை விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ மற்றும் அவரது மனைவி மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் வாங்கியதாக புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்து அங்கு கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து புதுக்கோட்டை நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.

Advertisment

அதேபோல் விஜயபாஸ்கர் சென்னை, இலுப்பூர் வீடுகள், திருவேங்கைவாசல் கல்குவாரி, கிரசரில் வருமான வரித்துறை அதிரடி சோதனை செய்ததில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு பெட்டிகளில் அள்ளிச் சென்றனர். அதற்கான விசாரனையும் ஒரு பக்கம் நடந்து வருகிறது. இந்த ஆவணங்களின் அடிப்படையில் இன்று காலை முதல் விஜயபாஸ்கரின் இலுப்பூர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இவர் மீதான குட்கா வழக்கும் நிலுவையில் உள்ளதால் அந்த வழக்கும் விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாகக் கூறப்படுகிறது. பாஜக கூட்டணிக்கு அதிமுக போகவில்லை என்பதால் எங்களை பயம் காட்ட இதுபோன்ற சோதனைகளை பாஜக அரசு செய்து வருகிறது. இது பாஜகவின் இயலாமையைக் காட்டுகிறது என்கின்றனர் அந்த பகுதி ர.ரக்கள்.

Advertisment