/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a3200.jpg)
சென்னையில் சீட் ஃபண்ட் நிறுவனம் உள்ளிட்ட ஐந்து இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை ஈடுபட்டுள்ளனர்.
சென்னை கோடம்பாக்கத்தில் இயங்கி வரும் கோகுலம் சிட் ஃபண்ட் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 2017 ஆம் ஆண்டு இதே கோகுலம் சிட் ஃபண்ட் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த நிறுவனத்தின் பல்வேறு கிளைகளில் இந்த சோதனை நடந்தது.
அதில் சுமார் ஆயிரம் கோடிக்கு மேல் கணக்கில் வராத வருவாய் இருப்பது வருமான வரித்துறையினர் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சோதனை தொடர்பான ஆவணங்கள் ஏற்கனவே அமலாக்கத் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் சில ஆவணங்கள் கிடைத்ததன் அடிப்படையில் அமலாக்கத்துறை இந்த சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிறுவனத்தின் கிளைகள் கேரளா மற்றும் ஆந்திராஉள்ளிட்ட இடங்களிலும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)