அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை (படங்கள்) 

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். காலை 7 மணி முதல் 5 பேர் கொண்ட அதிகாரிகள் பொன்முடி வீட்டில் அதிரடியாகச் சோதனை நடத்தி வருகின்றனர். அவரது சென்னை வீடு, அலுவலகம், விழுப்புரம் உள்ளிட்ட 9 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து திமுக அமைப்புச் செயலாளரும், அமைச்சர் பொன்முடியின் சட்ட ஆலோசகருமான ஆர்.எஸ். பாரதி அமைச்சரின் வீட்டிற்கு சென்றார். ஆனால், காவல்துறையினர் அவரை உள்ளே அனுமதிக்காததால், அவர் செய்தியாளர்களைச் சந்தித்துவிட்டு திரும்பி சென்றார்.

Ponmudi
இதையும் படியுங்கள்
Subscribe