கரூரில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள்ஆறு இடங்களில் சோதனை செய்து வருகிறார்கள். ஒரு சில இடங்களில் பத்திரிகையாளர்களுக்குஅனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.
கரூர் அடுத்த ராமேஸ்வரப்பட்டி பகுதியில் அமைந்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனையைத்தொடங்கியுள்ளனர். மத்திய துணை ராணுவப் படை வீரர்கள் ஏராளமானோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 5 வாகனங்களில் வந்த பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையைத்தொடங்கியுள்ளனர்.
இதேபோல் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராமகிருஷ்ணபுரம் பகுதியில் அமைந்துள்ள அமைச்சரின் தம்பி அசோக்குமார் வீடு, ராயனூர் பகுதியில் அமைந்துள்ளகொங்கு மெஸ் உணவக உரிமையாளர் மணி என்ற சுப்பிரமணி வீடு உள்ளிட்ட 6 இடங்களில்துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்புடன் சோதனை நடைபெறுகிறது.ஒரு சில இடங்களில் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. மேலும் கேமரா மற்றும் செல்போன் வீடியோ பதிவு செய்தால் அதனைத்துணை ராணுவத்தினர் பறித்து வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.