Enforcement Directorate raids Coimbatore

கோவை மேட்டுப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகி வீட்டில் காலை முதலே அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Advertisment

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜிக். இவர் எஸ்டிபிஐ கட்சியின் கோவை மாவட்டச் செயலாளராக இருந்து வருகிறார். அதேபோல் மேட்டுப்பாளையம் பகுதியில் பழக்கடை வைத்திருப்பவர் ரீலா. இவர்கள் இருவரது வீடுகளிலும் இன்று காலை முதலே அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

அதிக அளவில் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடைபெற்றதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. கேரள பதிவெண் கொண்ட காரில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய துணை பாதுகாப்பு படையினர் பாதுகாப்புடன் சோதனையில் நடைபெற்று வருகிறது.