Skip to main content

பாஜக அலுவலக நிர்வாகி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

Published on 26/09/2023 | Edited on 26/09/2023

 

Enforcement Directorate raids BJP office manager's house

 

இன்று தமிழகத்தில் சுமார் 40 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் தியாகராய நகர், சரவணா தெரு, திலக் தெருவில் உள்ள வீடுகளில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தஞ்சாவூரிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

 

அண்மையில் தமிழகத்தில் சென்னை உட்பட புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 34 இடங்களில் அமலாக்கத்துறை திடீர் சோதனை நடத்தியது. தொழிலதிபர் வீடுகள் மற்றும் அவர்களுக்குத் தொடர்புடையவர்களின் இடங்களில் பரபரப்பாக நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத 12.83 கோடி ரூபாய் வங்கியில் உள்ள பணம் முடக்கப்பட்டது. கணக்கில் வராத ரூபாய் 2.33 கோடி ரொக்கமாகப் பறிமுதல் செய்யப்பட்டது. ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

 

முன்னர் நடந்த இந்த சோதனை மணல் குவாரி அதிபர்களை குறிவைத்து  நடத்தப்பட்டது. இன்று நடந்துவரும் சோதனையில் ரியல் எஸ்டேட் அதிபர்கள் விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல் இன்று நடைபெற்று வரும் அமலாக்கத்துறை விசாரணையில் சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஜோதிமணி என்ற ஊழியர் வீட்டில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்