Advertisment

அமலாக்கத்துறை விசாரணை; உயர்நீதிமன்றத்தை நாடிய டாஸ்மாக் நிறுவனம்!

Enforcement Directorate investigation TASMAC moves High Court

சென்னை மற்றும் கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த 06ஆம் தேதி முதல் 08ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாகச் சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலும், அதேபோல் அரக்கோணம் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான நிறுவனத்திலும் அமலாக்கத்துறை சார்பில் சோதனை நடைபெற்றது. இதனையடுத்து இந்த சோதனையின் மூலம் ரூ.1000 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்திருக்கிறது.

Advertisment

இது தமிழக அரசியலில் புயலைக் கிளப்பியுள்ள நிலையில் எதிர்க்கட்சியினர் அரசுக்கு எதிராக கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அமலாக்கத்துறை விசாரணையை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், “டாஸ்மாக் விவகாரத்தில் மேற்கொண்டு அமலாக்கத்துறை விசாரணை நடத்த நடத்தத் தடை விதிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

முன்னதாக இந்த ஊழல் விவகாரத்தைக் கண்டித்து பா.ஜ.க சார்பில் சென்னை எழும்பூர் மைதானத்தில் இருந்து பேரணியாகச் சென்று தாளமுத்து நடராஜன் மாளிகையில் அமைந்துள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை நேற்று முன்தினம் (17.03.2025) முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவிருப்பதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக முறையாக அனுமதி கோரி பா.ஜ.க சார்பில் விண்ணப்பம் செய்திருந்தது. இருப்பினும் இந்த முற்றுகை போராட்டத்திற்கு காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. அதே சமயம் இருப்பினும் விதியை மீறி கடலூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னையை நோக்கி வந்த பா.ஜ.க. நிர்வாகிகளை அடுத்தடுத்து காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், பல்வேறு இடங்களில் பா.ஜ.க நிர்வாகிகளை காவல்துறையினர் வீட்டுக்காவலில் வைத்தது குறிப்பிடத்தக்கது.

Investigation TASMAC
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe