புதுக்கோட்டையில் பல்வேறு இடங்களில் இன்று காலை முதலே அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினம் பகுதியில் உள்ள தொழிலதிபர் ராமச்சந்திரன் என்பவருக்கு தொடர்புடைய அலுவலகங்கள், வீடு, குவாரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை 9.30 மணியிலிருந்து சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல் புதுக்கோட்டை தொழிலதிபர் ராமச்சந்திரனின் நெருங்கிய நண்பரான மணிவண்ணன் என்பவரின் வீட்டிலும் சோதனையானது நடைபெற்று வருகிறது. ஐந்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில், சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் சோதனையானது நீடித்து வருவதாகத்தகவல்கள் வெளியாகியுள்ளன.