/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/aadhavarjunan.jpg)
சென்னை மற்றும் கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில், போயஸ் கார்டன், டி.நகர் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை நடத்தி வருகின்றனர். அதே போல், கோவை துடியலூரில் உள்ள மார்ட்டினுடைய வீடு மற்றும் மார்ட்டின் குழும அலுவலங்களில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அமலாக்கத்துறை சோதனை காரணமாக மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். லாட்டரி அதிபர் மார்ட்டினை தொடர்ந்து, மார்ட்டினின் மருமகனும், விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளருமான ஆதவ் அர்ஜூனாவின்வீடு மற்றும் அவருக்குதொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)