சென்னையில் 47 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக இந்த சோதனையானது நடந்துவருவதாகக் கூறப்படுகிறது. சில முக்கிய பிரமுகர்களுக்கு சொந்தமான இடங்களிலும் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது. யார் யார் இந்தச் சோதனைக்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்பது குறித்த விரிவான விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.