jkl

Advertisment

கள்ளக்குறிச்சி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கவுதம சிகாமணிக்கு சொந்தமான 8.6 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

அந்நிய செலாவணி விதிகளை மீறி வெளிநாடுகளில் முதலீடு செய்த புகாரின் அடிப்படையில் கவுதம சிகாமணியின் 8.6 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுதொடர்பாக அவரிடம் விசாரணை செய்யவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. தேர்தல் வர இருக்கின்ற நேரத்தில் இந்த நடவடிக்கை திமுக வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.