Ended transport police issue

திருநெல்வேலி மாவட்டம்,நாங்குநேரியில்அரசுப் பேருந்தில் பயணித்த காவலர் ஒருவர், பயணச்சீட்டு எடுக்க மறுப்பு தெரிவித்து நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டவீடியோவெளியாகி சமூக வலைத்தளங்களில்வைரலானது. இந்தவீடியோசமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறிய நிலையில், தமிழக போக்குவரத்துத் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், காவலர்கள் பேருந்தில் பயணிக்கும் போது கட்டாயம்டிக்கெட்எடுக்க வேண்டும். தெரிவிக்கப்பட்டது. மேலும்,நாங்குநேரியில்நடைபெற்ற சம்பவத்தின் போது பேருந்து நடத்துநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காவலர் மீது துறை சார்ந்த நடவடிக்கைஎடுப்பதற்குப்பரிந்துரை செய்யப்பட்டது.

Advertisment

அரசுப்போக்குவரத்துக் கழகத்தின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து சென்னைஉள்படத்தமிழ்நாடு முழுவதும் அரசுப் பேருந்துகளுக்குஎதிராகப்போக்குவரத்துக் காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது. அதன்படி, போக்குவரத்து விதிகளைகடைப்பிடிக்காதஅரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும்நடத்துநர்களுக்குப்போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர். போக்குவரத்துத்துறைஅறிவிப்புக்குப்பிறகு, அரசுபேருந்துகளுக்குத்தமிழகபோலீசார்அபராதம் விதிக்கத் தொடங்கியதால் சர்ச்சையாக மாறியது. மேலும், காவல்துறைக்கும் போக்குவரத்துத் துறைக்கும் இடையே மோதல் போக்கு உருவாகும் சூழல் ஏற்பட்டிருந்தது.

Advertisment

இருதுறைக்கும் ஏற்பட்ட மோதல் போக்கை நிறுத்துவதற்கு உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வரும் நிலையில்,டிக்கெட்விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவலரும், நடத்துநரும் பரஸ்பரம் வருத்தம் தெரிவித்துவீடியோவெளியிட்டுள்ளனர். அவர்கள் வெளியிட்டுள்ளவீடியோவில், காவலர் ஆறுமுக பாண்டியனும், நடத்துநரும் ஆரத்தழுவினர். இதனையடுத்து அவர்கள் இருவரும்,போக்குவரத்துறையும்காவல்துறையும்நண்பர்களாகச்செயல்பட வேண்டும் என்று பேசிக்கொள்கின்றனர். இதன் மூலம், இருதுறைக்கும் ஏற்பட்டிருந்த மோதல் போக்கு முடிவுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.