ADVERTISEMENT

மதவாதத்துக்கு முடிவுக்கட்ட மத்திய அரசிற்கு எதிராக ஒன்றிணைவோம்: மு.க.ஸ்டாலின்

12:50 PM Apr 14, 2018 | Anonymous (not verified)


மதவாதத்துக்கு முடிவுக்கட்ட மத்திய அரசிற்கு எதிராக ஒன்றிணைவோம் என திமுக செயலதலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அம்பேத்கரின் 128வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

இந்தியாவிற்கு அம்பேத்கர் கொடையாக கொடுத்த அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்படுகிறது. மத்திய அரசின் மதவாதத்துக்கு முடிவுக்கட்ட அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்.

அம்பேத்கர் வகுத்த அரசியல் சட்டத்துக்கு குந்தகம் விளைவிக்க முயன்றால் தடுப்போம். ஆளுநர் எந்த நாளை தமிழ் புத்தாண்டாக கருதுகிறார் என்பதை பற்றி எங்களுக்கு கவலையில்லை. அம்பேத்கர் தந்த அரசியல் சட்ட அம்சங்களை பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும். பாஜக ஆட்சியில் அரசியல் சட்ட அடிப்படை அம்சங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT