Advertisment

அரசு அதிகாரிகளின் அலட்சியம்; வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படும் நரிக்குறவர் மக்கள்!

Encroachment of the land of Narikuravar people

Advertisment

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட உரக்காடு ஊராட்சியில் கடந்த 1967 ஆம், ஆண்டு பேரறிஞர் அண்ணா தலைமையிலான அப்போதைய தமிழக அரசிடம் கோவிந்தராஜுலு நாயுடு என்ற ஜமீன்தார் தனக்கு சொந்தமான சுமார் 47 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தை பொதுப் பயன்பாட்டிற்காக அரசிடம் ஒப்படைத்துள்ளார். அந்த நிலத்தை நரிக்குறவ மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காகத் தமிழக அரசு அவர்களுக்கு தானமாக கொடுத்துள்ளது. அந்த இடத்தில் விவசாயம் செய்து அதன் மூலம் விளைவிக்கப்படும் பொருட்களை அரசை நரிக்குறவ மக்களிடமிருந்து கொள்முதல் செய்து அதற்கான தொகையை அவர்களுக்கு வழங்கி வந்ததாக கூறப்படுகிறது.

காலப்போக்கில் பிழைப்பிற்காக அந்த இடத்தை விட்டு விட்டு பல்வேறு பகுதிகளுக்கு அவர்கள் இடம்பெர்ந்ததால் தரிசு நிலமாகக் கிடந்த அந்த இடத்தை தனியார் சிலர் ஆக்கிரமித்து போலி ஆவணங்கள் மூலம் அதிகாரிகளின் துணையோடு தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து விட்டதாகவும் இதுகுறித்து பாதிக்கப்பட்ட நரிக்குறவர்கள் வட்டாட்சியர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை ஆக்கிரமிக்கப்பட்ட தங்களுக்கு சொந்தமான நிலத்தை மீட்டு தரக் கோரி பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் அலட்சியம் காட்டியதாகக் கூறப்படுகிறது.

Encroachment of the land of Narikuravar people

Advertisment

இந்த நிலையில் எஞ்சியுள்ள நரிக்குறவ மக்களின் குடிசைகளை அங்கிருந்து அப்புறப்படுத்தும் நோக்கோடு வருவாய்த் துறையினர் ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு வந்ததால் ஆத்திரம் அடைந்த நரிக்குறவர்கள் ஜேசிபி இயந்திரத்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினர் அங்கிருந்து அவர்களை அப்புறப்படுத்த முயன்றதால் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

thiruvallur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe