Skip to main content

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் தூத்துக்குடி எஸ்.பி., சென்னைக்கு மாற்றம்..!

Published on 20/03/2021 | Edited on 20/03/2021
Encounter Specialist Thoothukudi SP, Change to Chennai

 

என் கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரையைப் பற்றிய அறிமுகம் தேவை இல்லை. ‘ஜெ’ காலத்தின்போது ஐ.ஜி. விஜயகுமார், சந்தன கடத்தல் வீரப்பனை ஒடுக்கப் பணியில் அமர்த்தப்பட்டவர். அவரது குழுவில் இருந்தவர் தூத்துக்குடி மாவட்டத்தின் வல்லநாட்டைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் வெள்ளத்துரை. வீரப்பனைச் சுட்டுக் கொன்றதால் இரட்டைப் பதவி உயர்வு பெற்று கூடுதல் எஸ்.பி.யானவர் வெள்ளத்துரை.

 

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் ஆல்வின் சுதன் வழக்கில் கைதான ரவுடி, மற்றும் மதுரையில் எஸ்.ஐ.க்களைக் குத்திய ரவுடிகளை என்கவுன்ட்டர் செய்ததில் ‘என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்’ எனப் பெயர் பெற்றவர் வெள்ளத்துரை. இவரது மனைவிதான் ராணி ரஞ்சிதம். எம்.ஏ., எம்.ஃபில். படித்த திருச்சி பெரியார் கல்லூரியில் பேராசிரியையாகப் பணியாற்றி விருப்ப ஒய்வு பெற்றவர். 

 

Encounter Specialist Thoothukudi SP, Change to Chennai

 

சகஜமாகப் பேசும் சுபாவம் கொண்ட ராணிரஞ்சிதம் அணுகுமுறையிலும் எளிமையானவர் என்று கூறப்படுகிறது. தி.மு.க.வின் மா.செ. ஆவுடையப்பன், அ.தி.மு.க.வின் இசக்கிசுப்பையா ஆகிய இரு அரசியல் ஜாம்பவான்கள் மோதுகிற அம்பாசமுத்திரம் தொகுதியில் அ.ம.மு.க. வேட்பாளராகக் களம் காண்கிறார் ராணி ரஞ்சிதம். தொகுதியின் பெண் வேட்பாளர் என்பதால் அ.ம.மு.க.வின் ஈர்ப்புத் தன்மை கூடும் என்பது கணக்காம்.

 

அவரது கணவரான என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை, நெல்லை மாநகரின் குற்ற ஆவணக்காப்பகக் கூடுதல் போலீஸ் துணை கமிஷ்னராக பணிபுரிந்து வருகிறார். தேர்தல் பணிக்கு சம்பந்தமில்லாதவர் என்ற போதிலும் மாநகர போலீஸ் அதிகாரியின் அறிக்கையின்படி வெள்ளத்துரையின் மனைவி தேர்தலில் வேட்பாளர் என்பதால் தேர்தல் அல்லாத பணியான சென்னை தலைமையிட போலீஸ் அலுவலகத்திற்கு போலீஸ் தலைமையின் உத்தரவுப்படி மாற்றப்பட்டிருக்கிறார் என அத்தொகுதியில் பரபவலாக பேசப்பட்டுவருகிறது.

 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

8 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்; தமிழக அரசு உத்தரவு

Published on 14/02/2024 | Edited on 14/02/2024
Tamil Nadu Govt order Transfer of 8 IAS officers

சமீப காலமாகப் பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில், அண்மையில் தமிழ்நாடு முழுவதும் 6 மாவட்ட ஆட்சியர் உள்பட 14 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், தற்போது 8 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், ‘மாநில மனித உரிமைகள் ஆணைய செயலாளராக ஏ. சுகந்தி ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மற்றும் உள்துறை இணைச் செயலாளராக எஸ்.பி. அம்ரித் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், வணிகவரித்துறை இணை ஆணையராக (நிர்வாகம்) பி. ரத்தினசாமி ஐ.ஏ.எஸ், தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று இணை மேலாண் இயக்குநராக ஆனந்த் மோகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இதனிடையே, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராக நிஷாந்த் கிருஷ்ணா ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி மாநகராட்சி ஆணையராக வி. சரவணன் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை பெருநகர மாநகராட்சி கூடுதல் ஆணையராக (சுகாதாரம்) வி. ஜெயச்சந்திர பானு ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மற்றும் திட்ட அதிகாரியாக வீர்பிரதாப் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

ஐஜி அதிகாரிகள் பணியிட மாற்றம்; தமிழக அரசு உத்தரவு

Published on 31/01/2024 | Edited on 31/01/2024
Tamil Nadu Govt announced Transfer of 2 IG officers

சமீப காலமாக பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவது அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில், அண்மையில், தமிழ்நாடு முழுவதும் 6 மாவட்ட ஆட்சியர் உள்பட 14 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், சென்னை மற்றும் மதுரை மாவட்ட ஐஜி அதிகாரிகள் 2 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘சென்னை வடக்கு மண்டல ஐஜியாக பொறுப்பு வகித்து வந்த கண்ணன், மதுரை தெற்கு மண்டல ஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதே போல், மதுரை தெற்கு மண்டல ஐஜியாக பொறுப்பு வகித்து வந்த கே.எஸ்.நரேந்திர நாயர், சென்னை வடக்கு மண்டல ஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.