Advertisment

'குமாரபாளையத்தை அதிரவைத்த என்கவுண்டர்'-சேலம் சரக டிஜிபி விளக்கம்

nn

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள நகர்ப்புற பகுதியைச் சுற்றியுள்ள 3 ஏ.டி.எம்.களில் அடுத்தடுத்து நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் கேரளாவில் கொள்ளையடித்துவிட்டு பணத்துடன் கண்டெய்னரில் தப்பிய ஏ.டி.எம். கொள்ளையர்கள் தமிழகத்தில் பிடிபட்டுள்ளனர்.

Advertisment

கேரளாவில் இருந்து வந்த கண்டெய்னர் லாரி ஒன்று நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் சாலையில் வரும் வழியெல்லாம் வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி உள்ளது. அதோடு அந்த கண்டெய்னர் லாரி நிற்காமல் சென்றது. இதனால் போலீசார் லாரியை நீண்ட தூரம் விரட்டிச் சென்று பிடித்து நிறுத்தினர். அப்போது லாரியின் உள்ளே ஆயுதங்களுடன் சிலர் இருப்பதாகத் தகவல் வெளியான நிலையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

Advertisment

அச்சமயத்தில் கண்டெய்னர் லாரியை திறக்கும் போது உள்ளே ஆயுதங்களுடன் இருந்த கொள்ளை கும்பல் போலீசாரை தாக்கியதால் துப்பாக்கிசூடு நடத்தி கொள்ளையர்களை போலீசார் பிடித்துள்ளனர். போலீசார் நடத்திய இந்த துப்பாக்கிச்சூட்டில் கொள்ளைக் கும்பலில் இருந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், ராஜஸ்தானை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளட்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கண்டெய்னர் லாரிக்குள் கட்டுக்கட்டாக பணம் மற்றும் பதிவு எண் இல்லாத ஹுண்டாய் கிரெட்டா கார் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் சேலம் டி.ஐ.ஜி., நாமக்கல் எஸ்.பி. நேரில் விசாரணை மேற்கொண்டனர்.

.

'Encounter that rocked Kumarapalayam' - Salem DGP explains

பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக சேலம் சரக டிஜிபி உமா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில், ''வாகன சோதனையின் போது ஒரு கண்டெய்னர் லாரி நிற்காமல் போகிறது. நிற்காமல் போவதால் போலீசார் சேஸ் பண்ணினார்கள். அப்பொழுது சங்ககிரி நோக்கி சென்ற லாரி சங்ககிரி டோல்கேட் இருந்ததால் போன வழியிலேயே அந்த வண்டி திரும்பி வந்தது. இரண்டு முறை சங்ககிரியை சுற்றிவிட்டு வெப்படை ரோட்டில் போகிறார்கள். சன்னியாசிப்பட்டி தாண்டியதும் போலீசார் சேஸ் செய்வதை அறிந்துகட்டுப்பாடில்லாமல் வேகமாக லாரியை இயக்கி உள்ளார்கள். இரண்டு பைக், ஒரு காரில் மோதி விட்டு லாரி சென்றுள்ளது. போலீஸ் அந்த கண்டெய்னரை நிறுத்தியவுடன் டிரைவரை கீழே இறக்கி செக்யூர் பண்ணி விட்டார்கள். லாரி கேபினில் நான்கு பேர் இருந்தார்கள். அந்த நான்கு பேரையும் எடுத்து விசாரிக்கையில் இது கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து வந்த வண்டி என்பது தெரிய வந்தது.

கண்டெய்னர் லாரியை சன்னியாசிப்பட்டியில் இருந்து வெப்படை ஸ்டேஷனுக்கு கொண்டு வந்துவிடலாம் என்று முடிவெடுத்து வண்டிக்கு முன்னேயும் பின்னேயும் போலீசார் வந்து கொண்டிருந்தார். அப்பொழுதுகண்டெய்னர் பின்பக்கம் சவுண்ட் வந்தது. வண்டியை நிறுத்த சொல்லி கதவை திறக்கச் சொன்னோம். கதவை திறந்து பார்த்த பொழுது இரண்டு பேர் உள்ளே இருந்தார்கள். ஒருவன் உள்ளே இருந்து ப்ளூ கலர் பேக்குடன் குதித்து ஓடினான். மற்றொருவருனும் ஓடினான். போலீசார் பின்னாடி துரத்திக் கொண்டு சென்றார்கள். அந்த பகுதியில் ஓடை மாதிரி சென்றது. பணப்பையோடு அசாருதீன் என்ற நபர் கொண்டிருந்தான. மற்றொருவன் கீழே விழுந்து விட்டான். உடனே எஸ்.ஐ அவனை பிடிக்க சென்ற பொழுது அட்டாக் செய்ய முயற்சித்தான். அப்பொழுது சுட வேண்டியதாயிற்று. அதைத் தொடர்ந்து முன்னாடி சென்று கொண்டிருந்த பணம் இருந்த பேக்குடன் ஓடிய அசாருதீன் துப்பாக்கிசூடு சட்டத்தை கேட்டு நின்று விட்டான். போலீசார் வெப்பனை காட்டி அவனையும் நிற்க சொன்னார்கள். ஆனால் அவன் கீழே கிடந்த கற்களை எடுத்து இன்ஸ்பெக்டரை நோக்கி வீசினான். அவனும் ஓடாமல் இருப்பதற்காக காலில் சுட வேண்டியது. ஏடிஎம்-ஐ போக்கஸ் பண்ணி திருடுவது தான் இவர்களுடைய தொழில். ஹரியானாவின் இரண்டு மாநிலங்களை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள் .தொடர்ந்து நடத்தப்படும் விசாரணையில் தான் அவர்களுடைய நடவடிக்கைகள் என்ன என்பது தெரியவரும்''என்றார்.

encounter police Theft ATM lorry kumarapalayam
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe