கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடுமுழுவதும் மே 03 வரை ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சென்னை, கோவை, சேலம், திருப்பூர், மதுரை ஆகிய மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு தமிழக அரசின் உத்தரவு படி நேற்றிலிருந்து (26.04.2020) அமலுக்கு வந்தது. இதனால், நேற்றைய தினம் சென்னையின் முக்கிய சாலைகளான கிண்டி கத்திப்பாரா, தி.நகர் உஸ்மான் ரோடு, அண்ணா சாலை ஆகிய இடங்கள் மனித நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. வாகனங்கள் அற்ற அமைதியான சூழலால் கால்நடைகள் சாலை நடுவில் நிம்மதியாக படுத்திருப்பதை காணமுடிந்தது.
முழு ஊரடங்கு! ஆள் அரவமற்ற அமைதியான சென்னை! (படங்கள்)
Advertisment