
திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவுசெய்து, பல்வேறு காரணங்களினால் தங்களது பதிவினை 2014, 2015, 2016, 2017, 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் (01.01.2014 முதல் 31.12.2019 வரை) புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் பதிவுமூப்பினை மீளப்பெறும் வகையில், மீண்டும் ஒருமுறை புதுப்பித்துக்கொள்ள ஏதுவாக சிறப்பு புதுப்பித்தல் சலுகையை தமிழ்நாடு அரசு 02.12.2021-ன் வாயிலாக வழங்கப்பட்டுள்ளது.
02.12.2021 முதல் மூன்று மாதங்களுக்குள் அதாவது 01.03.2022-க்குள் வேலைவாய்ப்புத்துறை இணையம் https://tnvelaivaaippu.gov.in/ வாயிலாக தங்கள் விடுபட்ட பதிவினை புதுப்பித்துக்கொள்ளலாம். அவ்வாறு இணையம் வாயிலாக புதுப்பிக்க இயலாதவர்கள் 01.03.2022க்குள் திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்குப் பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பம் அளித்து அல்லது நேரில் அணுகி புதுப்பித்துக்கொள்ளலாம்.