/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_2960.jpg)
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அலுவலக பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் பள்ளிக் கல்வித்துறையில் பணிபுரியும் அலுவலக பணியாளர்களுக்கு பணியிட மாறுதல், பதவி உயர்வு மற்றும் புதிய பணியிடங்கள் உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு மாநிலத் தலைவர் ராஜராஜன் தலைமையில் நடந்தது.
மாநில பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியன், மாநில பொருளாளர் துரைப்பாண்டி ஆகியோர் முன்னிலைவகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்டத் தலைவர் ரங்கராஜ், மாநில துணை பொது செயலாளர் சிவக்குமார் உள்பட சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)