சுங்கச்சாவடி ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் வாகனங்கள் சுங்கச் சாவடியில் இலவசமாக பயணிக்கும் நிலை பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறையில் ஏற்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஃபாஸ் டேக்முறையில்சுங்க கட்டணம் வசூலிக்கும் முறை நடைமுறையில் உள்ளதால் பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை மற்றும் செங்குறிச்சியில் உள்ள சுங்கச்சாவடியில் 15 க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடி ஊழியர்கள் நிரந்தரமாக பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தனர். இதனைக்கண்டித்து திருமாந்துறை சுங்கச்சாவடி ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் திருமாந்துறை, செங்குறிச்சி ஆகிய சுங்கச்சாவடிகளில் வாகனங்களால் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படாமல் இலவசமாக கடந்து சென்று வருகிறது.