பராமரிப்பு பணியின்போது மின்சாரம் தாக்கி ஊழியர் உயிரிழப்பு - உறவினர்கள் போரட்டம்

Employee incident by electrocution during maintenance work-Relatives fight

நெல்லை சிப்காட் பகுதியில்மின்சார பராமரிப்பு பணியில் ஈடுபட்ட மின் ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் மணிகண்டன் என்கிற 32 வயது இளைஞர் மின்வாரியத்தில் பணியாற்றி வந்தார். அவருடைய தந்தையும்மின்வாரியப் பணியாளராக உள்ளார். இன்று காலை 9 மணி முதல் பாளையங்கோட்டை மற்றும் கங்கைகொண்டான் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், சிப்காட் பகுதியில் உள்ள தொழிற்சாலை அருகில் இருந்த ட்ரான்ஸ்பார்மரில் பராமரிப்பு பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி மணிகண்டன் உயிரிழந்தார். அலட்சியமாக செயல்பட்டு இந்த உயிரிழப்புக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என்று மணிகண்டனின் பெற்றோர் மற்றும்உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

electicity incident nellai
இதையும் படியுங்கள்
Subscribe