Advertisment

மின் துறையின் அலட்சியத்தால் ஊழியர் உயிரிழப்பு!

asd

மின் துறையின் அலட்சியத்தால் கடலூரை அடுத்த வானமாதேவியில் மின் ஊழியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கடலூர் மாவட்டம் பட்டாம்பக்கத்தை சேர்ந்த பக்கிரி என்பவர் வானமாதேவியில் மின் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் வானமாதேவியில் உள்ள வயல்வெளியின் உள்ளே அமைந்துள்ள டிரான்ஸ்பார்மரில் மின் பழுது ஏற்பட்டதை சரி செய்வதற்கு சென்றுள்ளார்.

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

அங்கு உயர்அழுத்த மின் கம்பம் செல்கிறது. இதற்காக உடனே கடலூர் அடுத்த நத்தபட்டில் உள்ள மின் அலுவலகத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வானமாதேவிற்கு வரும் பவரை நிறுத்துமாறு கூறி உள்ளார். உடனே அவர் சென்று நிறுத்தியதாக கூறியுள்ளார்.

sds

அதை நம்பிய பக்கிரி பழுதை சரிசெய்ய மின் கம்பத்தின் மீது ஏறியுள்ளார். ஆனால் நத்தபட்டு அலுவலகத்தில் இவர் சொன்ன உயர்மின் பவரை நிறுத்துவதற்கு பதிலாக பணியில் உள்ளவரின் அலட்சியத்தால் வேறு ஒரு உயர்மின் அழுத்ததை நிறுத்தியுள்ளார். இதை அறியாத பக்கிரி உயர் மின் கம்பத்தை தொட்டதால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

dead
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe