Skip to main content

உணர்ச்சிமயமான குரல் நடுத்தெருவில் நிறுத்தும்... உவைசிக்கு காங்கிரஸ் கண்டனம்

Published on 11/11/2019 | Edited on 11/11/2019

 

காங்கிரஸ் மரணிக்கவேண்டும் என்று சொன்ன உவைசிக்கு காங்கிரஸ் சிறுபான்மைத்துறை தலைவர் அஸ்லம் பாஷா கண்டனம் தெரிவித்துள்ளார்.
 

இதுதொடர்பாக அஸ்லம் பாஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 


உணர்ச்சி மயமான பிரச்சனைகளை காங்கிரஸில் நேரு வம்சாவளி தலைவர்கள் கையாண்ட விதம் தியாகம் நிறைந்தது. அன்றன்று பூத்த தலைவர்கள் அள்ளி வீசும் அவதூறுகளை நிறுத்திவிட்டு, நேரு குடும்பம் அரசியலில் ஆற்றிய பங்கையும் வரலாற்றையும் காங்கிரஸில் அவர்கள் செய்து கொண்ட சமரசத்தையும் அறிவியல் பூர்வமாக அனுக வேண்டும். நேரு அவர்கள் தன்னை நாத்திகராக அறிவித்த அறிவியளாலர். இந்திய அரசியல் சாசன அமர்வை சீர்குழைக்க நடந்த சதிகளை எல்லாம் முறியடித்து அன்னல் அம்பேத்கர் தலைமையில் அமைத்திட்ட சாதுரியம்.


 

Asaduddin Owaisi



காந்தியின் சனதான பிற்போக்கு தனங்களை உள்ளடக்கிய தீவிர வலதுசாரிகள் நிறைந்த காங்கிரஸ் கட்சியை மதசார்பற்ற வலதுசாரிகளாக மாற்றவே பெரும்பாடுபட்டார்.இன்று தீர்பிற்கு எதிராக எழுந்த மதசார்பற்ற இந்துமக்கள் குரலை உருவாக்கியதே காங்கிரஸ் தான்.அது ததான் நேரு அவர்கள் வெற்றி.
 

காஷ்மீர் மக்கள் உரிமைக்காக குரல் கொடுக்கும்இந்துக்களை உருவாக்கியதே காங்கிரஸ் பெருமை. முத்தலாக் மசோதாவை எதிர்த்து இந்துக்களை பேச வைத்தது காங்கிரஸ் பெருமை. பாபர் மசூதி முஸ்லீம்களுக்கே என லட்சக்கணக்கான இந்துக்களை பேச வைத்தே காங்கிரஸ்.
 

காமராசர் அமைச்சரவையில் தாழ்த்தப்பட்ட பரமேஷ்வரனைஇந்து அற நிலைஅமைச்சராக நியமித்தது காங்கிரஸ் பெருமை ஆயிரக்கனக்கான படித்த பிராமனர்கள் மத்தியில் அம்பேத்கரை சட்ட அமைச்சராகவும் மௌலானா அபுல்கலாம் ஆசாத்தை கல்வி அமைச்சராக நியமித்த காங்கிரஸ் பெருமை. காஷ்மீரின் தனித்தன்மை காத்த காங்கிரஸ் பெருமை.அயோத்தி பாபர் மசூதி பிரச்சனையில் மதசார்பற்ற அரசியல் சாசனத்தை பாதுகாக்கும் சமரசம் வலதுசாரிகளுக்கும் இடது சாரிகளுக்கும் மத்தியில் எடுத்தபுது முயற்சியே மதசார்பற்ற அரசியல்.
 

அதற்கென சொந்த கட்சியினரை தயார்படுத்தவே கடும் போராட்டம்.கட்சிக்குள் கரையான்களாக தீவிர வலதுசாரிகளின் பிளவு முயற்சி இவ்வளவையும் தான்டி பெரும்பான்மை மக்களின் பெரும்பான்மையாளர்களை மதசார்பற்ற சனநாயக சக்திகளாக வென்றெடுத்தது காங்கிரஸ் வெற்றி. இந்திரா இல்லாத இந்தியா என வெறியூட்டி சீக்கிய தீவிரவாதத்திற்கு இந்திராவை பலியிட்டது வலதுசாரிகள் தனியார்மய தாராளமய சந்தைமயத்திற்குஆதரவாக மிஸ்டர்கிளீன் ராஜிவ்காந்தி இமேஜ்யை உடைத்து பலிவாங்கிய வலதுசாரிகள் ஒதுக்கப்பட்ட நரசிம்மராவ் மூலம் தங்கள் விருப்பங்களை நிறைவு செய்த வலது சாரிகள்.


 

நேரு குடும்பம் பழியை சுமக்கிறது. அம்பேத்காரின் சில சமரசம் தாழ்த்தப்பட்ட மக்களை பாதுகாத்தது.காயிதே மில்லத்தின் சமரசம் முஸ்லிம் மக்களை பாதுகாத்தது. காங்கிரசின் சமரசம் மதசார்பற்ற குடியரசை பாதுகாத்தது. கூட்டத்தில் கோசம்போடுவது யாருக்கும் எளிது. தனிமனிதனை பாதுகாப்பது அரசின் கடமை.ஜெய் ஸ்ரீ ராம் எனும் கோசத்தின் கூட்டு வன்முறையின் கோரத்தை நாடு உணர்ந்துள்ளது. சாதியாய் பிளவுபடுத்தி மதமாய் ஒன்றுபடுத்திய வலதுசாரி அரசியலையும் ஒன்றாய் இருந்த நாம் பல அமைப்புகளாக பிரிந்த பிரச்சனைகளையும் நேர்மையுடன் புரிந்து கொள்ள வேண்டும்.
 


நேருவும் காங்கிரசும் இல்லையென்றால் சிறுபான்மை மக்கள் என்றோ நசுக்கப்பட்டிருப்பார்கள்.உணர்ச்சிமயமான குரல் நடுத்தெருவில் நிறுத்தும். சிறுபான்மை சமூகமே கல்வியை கையில் எடு ! அதிகாரத்தை கைப்பற்று !அரசியலை உனதாக்கு !!  இதுவே நம் அறம் அதை நோக்கி நகர்வோம். இவ்வாறு கூறியுள்ளார். 



 

சார்ந்த செய்திகள்

Next Story

“இஸ்ரேலின் செயல் ஏற்க முடியாதது” - ஸ்பெயின் மற்றும் பெல்ஜியம் பிரதமர்கள் கண்டனம்

Published on 25/11/2023 | Edited on 25/11/2023

 

 Spanish and Belgium Prime Ministers condemned says Israel's action is unacceptable

 

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே ஒரு மாதத்திற்கும் மேலாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவை சுற்றி வளைத்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.

 

தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்திய இஸ்ரேல் கிட்டத்தட்ட அனைத்து தொலைத்தொடர்பு சேவைகளை அழித்து உலகத்திலிருந்து காசாவை தனிமைப்படுத்தியுள்ளது. ஹமாஸ் அமைப்பினரை ஒருவர் விடாமல் அழிக்க நினைக்கும் இஸ்ரேலின் தாக்குதலில் ஆயிரக்கணக்கான அப்பாவி பாலஸ்தீன மக்கள் தினந்தோறும் கொல்லப்பட்டு வருகின்றனர். அதில் 60 சதவீதம் பேர் பெண்களும், குழந்தைகளும் எனக் கூறப்படுகிறது. இரு தரப்பிற்கும் இடையிலான இந்தப் போரில் பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போரை நிறுத்த உலக நாடுகள் கோரிக்கை வைத்து வருகின்றன.

 

இதனையடுத்து இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான தற்காலிக போர் நிறுத்தம் நேற்று (24-11-23) முதல் அமலுக்கு வந்துள்ளது. போர் நிறுத்தம் 4 நாட்கள் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், எகிப்தின் ரபா எல்லை பகுதியில் இஸ்ரேலிய பிணைக்கைதிகள் 13 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். இந்த நிலையில், அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலின் செயல் ஏற்றுக் கொள்ள முடியாது என ஸ்பெயின் மற்றும் பெல்ஜியம் பிரதமர்கள் கூட்டாக சேர்ந்து கண்டனம் தெரிவித்துள்ளனர். 

 

எகிப்தின் ரபா எல்லை பகுதியில் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் மற்றும் பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர் டி குரூ ஆகியோர் கூட்டாக சேர்ந்து நேற்று (24-11-23) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர். அப்போது ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் பேசியதாவது, “சர்வதேச சமூகம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என அனைவரும் பாலஸ்தீனத்திற்கு அங்கீகாரம் வழங்குவதற்கான நேரம் வந்துள்ளது. ஐரோப்பியா அது போன்று இணையவில்லை என்றால், ஸ்பெயின் தனது சொந்த முடிவை எடுக்கும்” என்று கூறினார்.

 

அதனை தொடர்ந்து, பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர் டி குரூ பேசியதாவது, “பிணைய கைதிகள் உடனடியாக விடுவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதே முன்னுரிமையாக இருக்க வேண்டும். அதன்படி, உதவி பொருட்கள் காசாவுக்கு செல்ல வேண்டும். பொதுமக்கள் கொல்லப்படுவது உடனே நிறுத்தப்பட வேண்டும். இதில் ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். காசாவை அழிப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஒரு சமூகம் அழிக்கப்படுகிறது என்பதனையும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அப்பாவி மக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை கொன்று குவிக்கும் இஸ்ரேலின் செயல் ஏற்க முடியாதது. அதனால், நிரந்தர போர் நிறுத்தம் வேண்டும்” என்று கூறினார்.  

 

 

Next Story

இஸ்லாமிய இட ஒதுக்கீடு குறித்து பேசிய அமித்ஷா; ஒவைசி கடும் எதிர்ப்பு

Published on 24/04/2023 | Edited on 24/04/2023

 

Owaisi strongly condemned Amit Shah who spoke about Islamic reservation

 

இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என அமித்ஷா பேசியதற்கு ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி கருத்து தெரிவித்துள்ளார். 

 

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று தெலுங்கானா சென்ற போது, அங்கு நடந்த கட்சி கூட்டத்தில், “தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் அரசு, ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசியின் கொள்கைகளை நிறைவேற்றி வருகிறது. காரின் கைப்பிடி ஒவைசியிடம் இருக்கும்போது அது எப்படி சரியான திசையை நோக்கி செல்லும். சந்திரசேகர் ராவின் ஊழல் ஆட்சியின் முடிவுக்கான கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது. சந்திரசேகர் ராவ் பிரதமராக வேண்டும் என்ற கனவில் உள்ளார். 2024 தேர்தலிலும் அந்த இடத்தை மோடியே வைத்து இருப்பார்.

 

முதலில் அவர் இந்த ஆண்டு தெலுங்கானாவில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் தன்னுடைய இருக்கையை தக்கவைப்பதில் கவனம் செலுத்தட்டும். ஒருபோதும் பிரதமர் மோடியை தெலுங்கானா மக்களிடம் இருந்து பிரிக்க முடியாது. மத்திய அரசின் திட்டங்கள் ஏழை எளிய மக்களைச் சென்றடையாமல் சந்திரசேகர் ராவின் அரசு தடுத்து வருகிறது. ஆனால், கண்டிப்பாக பாஜக தெலுங்கானாவில் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும். மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவது இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது. பாஜக ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 4 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு அது இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு பகிர்ந்தளிக்கப்படும்” என்றார். 

 

இது அங்கிருக்கும் இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி, “தெலுங்கானாவில் இஸ்லாமியர்களுக்கு மத அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுக்கப்படவில்லை. அறிக்கையின் அடிப்படையில்தான் கொடுக்கப்படுகிறது. இதனைப் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் இஸ்லாமிய வெறுப்பு அரசியல் செய்கிறார்கள். பாஜக, ஆர்.எஸ்.எஸ் ஆட்சியில் பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். சீனாவுடன் எல்லை பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால், இதைப்பற்றியெல்லாம் விவாதிக்காமல் அமித்ஷா இஸ்லாமியர்கள் சமூகத்திற்கு அச்சுறுத்தல் என்று தெரிவித்து வருகிறார்.” என்று தெரிவித்தார்.