Advertisment

இம்மானுவேல் சேகரன் நினைவு நாள்: மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சர்கள்!

Emmanuel Sekaran Memorial Day; Ministers paid their respects

இன்று (11.09.2021) சுதந்திர போராட்டவீரர் இம்மானுவேல் சேகரனின் 64ஆம் ஆண்டு நினைவுநாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழிகாட்டுதலின் பேரில் தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த இம்மானுவேல் சேகரனின் திருவுருவப் படத்திற்குத் தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என். சேகரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Advertisment

இந்நிகழ்வில் கிழக்குதொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், கோவிந்தராஜன், வன்னை அரங்கநாதன் மற்றும் மாநில, மாவட்ட,ஒன்றிய, பகுதி, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Advertisment

அதேபோல் திருச்சி சாஸ்திரி சாலையில் உள்ள அமைச்சர் கே.என். நேரு அலுவலகத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. இந்த நினைவு தினத்தில் இம்மானுவேல் சேகரனின் திருவுருவப் படத்திற்கு அமைச்சர் கே.என். நேரு மற்றும் தொண்டர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். அவரைத் தொடர்ந்து அவைத்தலைவர் அன்பழகன் தலைமையில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் திமுகவில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

anbil mahesh trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe