Advertisment

கடலூர் மாவட்டத்தில் யானை தந்தம் கடத்தல்

po6

கடலூர் மாவட்டம் புது சத்திரம் காவல் ஆய்வாளர் அமுதா, மற்றும் டெல்டா படை காவல்துறையினர் ஆலபாக்கம் பகுதியில் திங்களன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரை சோதனை செய்தபோது அவர்கள் வைத்திருந்த பையில் இரண்டு யானை தந்தந்தங்கள் இருந்தன. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் தந்தங்களை கைப்பற்றினார்கள்.

Advertisment

பின்னர் இது சம்பந்தமாக வன்னியர் பாளையம் பிரகாஷ் ( 35) வேலங்கிப் பட்டு சிலம்பரசன் (28) குருவப்பன்பேட்டை கொளஞ்சி(33) ஆகிய மூன்று பேர்கள் மீது வழக்கு பதிவுசெய்து கைது செய்துள்ளனர். மேலும் இது சம்பந்தமாக இரண்டு பேர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த யானை தந்தம் எப்படி வந்தது என்பது குறித்து காவல்துறையினர் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்து வருகிறார்கள்.

Advertisment
Cuddalore
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe