Advertisment

'உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி'- 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

'Emerging Depression'- Heavy rain warning for 5 districts

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பரவலாக மழை பொழிந்து வரும் நிலையில் இன்று பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Advertisment

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வெளியான அறிவிப்பின்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர்,மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமானது முதல் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இன்று ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை ஆய்வு மையம், இதன் காரணமாக தமிழகத்தில் நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டைஉள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை இன்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

weather
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe