Advertisment

'ஏப்ரல் 2- ஆம் தேதி பா.ம.க.வின் அவசர செயற்குழுக் கூட்டம்'- பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி அறிவிப்பு!

'Emergency Working Committee Meeting of the BJP on April 2' - P.M.K. Chairman GK Mani's announcement!

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பாட்டாளி மக்கள் கட்சியின் அவசர செயற்குழுக் கூட்டம் நாளை மறுநாள் (02/04/2022) சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு சென்னை சிவானந்தா சாலையில் பொதிகைத் தொலைக்காட்சி எதிரில் உள்ள அண்ணா அரங்கத்தில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisment

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா, பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும் இந்த அவசர செயற்குழு கூட்டத்திற்கு கட்சித் தலைவர் ஜி.கே. மணி தலைமையேற்கிறார். வன்னியர் சங்கத்தின் தலைவர் பு.தா. அருள்மொழி, கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன் பொருளாளர் திலகபாமா ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

Advertisment

இக்கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள், பா.ம.க.வின் பல்வேறு அணிகள் மற்றும் சார்பு அமைப்புகளின் மாநில நிர்வாகிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்பார்கள்.

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது செல்லாது; அதே நேரத்தில் இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்தும், அதனடிப்படையிலான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவசர செயற்குழு கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்." இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Announcement pmk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe