என்னதான் இருக்கும் இந்த வண்டிக்குள்ள? கால்நடைகளுக்கான அவசர ஊர்தி..! (படங்கள்) 

தமிழக அரசு சார்பில் கால்நடைகளுக்கான அவசர மருத்துவ ஊர்தி சேவை துவங்கப்பட்டுள்ளது. கால்நடைப் பராமறிப்புத்துறை சார்பில் ரூபாய் 2 கோடியே 40 லட்சம் செலவில் குளிர்சாதன வசதி கொண்ட 22 நவீன அவசர கால்நடை மருத்துவ ஊர்திகள் வாங்கப்பட்டுள்ளன. கால்நடைகள் இருக்கும் இடத்திற்கே சென்று சிகிச்சையளிக்கும் வகையில் இந்த ஊர்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு மருத்துவர்,உதவியாளருடன் கூடிய இந்த அவசர ஊர்தியை அழைப்பதற்கு 1962 என்ற தொலைபேசி எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த அவசர ஊர்தி சேவையைதுவங்கி வைத்தார்.

Edappadi Palanisamy edappadi pazhaniswamy
இதையும் படியுங்கள்
Subscribe