tngovt

Advertisment

கடைசியாககடந்த மார்ச் 5 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூடியிருந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் தற்பொழுது துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில்ஆன்லைன்ரம்மிக்குஎதிராகஅவசரச் சட்டம் கொண்டுவருவது குறித்து ஆலோசிக்கப்பட்டுவருவதாகத்தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்தக்கூட்டத்தில் புதிய முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிப்பது, முதலீடுகளை ஈர்ப்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவேஅதிமுக ஆட்சிக் காலத்தில்ஆன்லைன்ரம்மிவிளையாட்டுக்குஎதிராகக்கொண்டுவரப்பட்ட சட்டம் ரத்தான நிலையில் திமுக புதிய சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் எனப் பல்வேறு தரப்புகளிலிருந்து வலியுறுத்தல்கள் கொடுக்கப்பட்ட நிலையில், தற்பொழுது இதுகுறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.