/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/helmet.jpg)
இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் தலைகவசம் அணிய வேண்டும். பின்னால் அமர்ந்திருப்பவர்களும் கட்டாயம் தலைகவசம் அணிய வேண்டும் என்று காவல்துறை சார்பில் தற்போது சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து தெருக்கூத்து கலைஞர்கள் நாடகம் நடத்தி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வெற்றிச் செல்வன் ஏற்பாட்டில் காஞ்சிபுரம் பொன்னேரி கரை சாலையில் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் கடவுள் சிவபெருமான் மற்றும் எமதர்மராஜா வேடமிட்டு ஹெல்மெட் விழிப்புணர்வு பிரச்சாரம் சுவாரசியமாக நடந்தது. இதை அப்பகுதி மக்கள் வரவேற்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)