Elphin corporate partners involved in the struggle

Advertisment

திருச்சி எல்ஃபின் நிதி நிறுவனத்தில் பணம் டெபாசிட் செய்பவர்களுக்கு பன்மடங்கு திருப்பித் தரப்படும் என்ற விளம்பரத்தை நம்பி அந்நிறுவனத்தில் கோடிக்கணக்கில் பலர் பணம் டெபாசிட் செய்துள்ளனர். இந்நிலையில், சில மாதங்களாக டெபாசிட் செய்தவர்களின் தொகை முதிர்வு அடைந்த நிலையிலும் பலருக்குப் பணம் திரும்பித் தரப்படாமல் உள்ளது.

பணம் திருப்பிக் கிடைக்காத ஆத்திரத்தில் அந்நிறுவனத்தின் பங்குதாரர்கள் இன்று திருச்சியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருச்சி கோர்ட் எம்ஜிஆர் சிலை அருகே திரண்ட 150க்கும் அதிகமானவர்கள் தங்களின் பணத்தைத் திருப்பித் தரக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எல்பீன் நிறுவனம் வழங்கிய செக்குகளை எடுத்து வந்து சாலையில் பரப்பி காட்சிப்படுத்தினர். அவர்களுடன் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்டர்கள் கூறும்போது, “எல்பீன் நிறுவனத்தார் திருச்சியில் ஏமாற்றி பல கோடி ரூபாய் மோசடி செய்து தலைமறைவானதைப்போல, தற்போது ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் புதிதாக நிறுவனம் தொடங்கி உள்ளதாக கேள்விப்பட்டோம். எனவே போலீசார் துரித நடவடிக்கை எடுத்து எங்களைப் போன்று வேறு யாரும் ஏமாறாமல் பாதுகாக்க வேண்டும்” என்று கூறினர்.