நடிகர் வடிவேலு, தம்பி மணிகண்டன் மற்றும் இரண்டு பேர் எலி படத்தின் தயாரிப்பாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக மதுரை கே புதூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

eli-movie-producer-complaint-on-vadivelu

தமிழ் சினிமாவில் நகைச்சுவை மன்னனாக வலம் வந்தவர் வடிவேலு. ஆனால் தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார். இதற்கிடையில் சிம்புதேவன் இயக்கத்தில் அவர் நடித்து வந்த 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதில் அந்த படத்தை தாயாரித்த இயக்குநர் ஷங்கருக்கும் வடிவேலுவுக்கும் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்பட்டது. இப்படி பல்வேறு பிரச்சனைகளில் வடிவேலு இருந்து வருகிறார்.

வடிவேலு எலி திரைப்படத்தில் நடித்த போது, அந்த படத்தின் தயாரிப்பாளர் சதீஷ் குமாருக்கு, தனது நண்பர் ராம்குமாரிடம் ஒன்றரைக்கோடி ரூபாய் வாங்கிக்கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த பணத்தை திருப்பி கொடுக்காததால் வடிவேலு கொலை மிரட்டல் விடுத்ததாக சதீஷ் குமார் தரப்பில் மதுரை கே புதூர் காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வடிவேலுவை தேடி வருவதாக கூறப்படுகிறது.