Advertisment

பிப்.8 ஆம் தேதி துவங்குகிறது 'யானைகள் நலவாழ்வு முகாம்' 

elephant

பவானிஆற்றுப்படுகையில் 48 நாட்கள்யானைகளுக்கு சிறப்பு நலவாழ்வு முகாம் நடத்த, கடந்த மாதம் 28-ஆம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது.

Advertisment

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி என்ற இடத்தில், 48 நாட்கள்யானைகள் சிறப்பு முகாம் நடத்ததமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அறநிலையத்துறைகட்டுப்பாட்டில் உள்ள கோவில் யானைகளுக்கு நடக்கும் இந்தச் சிறப்பு முகாமில் பங்கேற்கும் கோவில் யானைகளுக்கு கரோனாபரிசோதனை செய்யப்படும். அப்படி கரோனா பரிசோதனை செய்யப்பட்டு யானைகளுக்குகரோனாஇல்லை என்ற மருத்துவ சான்றிதழைப் பெற்றபிறகே யானைகள் முகாமிற்கு அனுப்பப்படும்.

Advertisment

யானைகளுடன் முகாமிற்கு அனுப்பப்படும் பணியாளர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்படும். நலவாழ்வு முகாமில்பங்குபெறும் யானைகளுக்கு அருகே பொதுமக்கள் செல்ல அனுமதிக்கக் கூடாது. நோயுற்ற, தொற்று நோய் பாதித்தயானைகளை முகாமிற்கு கொண்டுவர தேவையில்லை எனவும் தமிழக அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில்,பவானிஆற்றுப்படுகையில் 48 நாட்கள் நடக்கும் யானைகளுக்கானசிறப்புநலவாழ்வுமுகாம் பிப்ரவரி 8 ஆம் தேதி காலை 9 மணிமுதல் 10.30 மணிக்குள் துவங்கவுள்ளது. முகாமில் அறநிலையத்துறை கோவில்கள், திருமடங்கள், புதுச்சேரி கோவில் யானைகள் பங்கேற்க உள்ளன. யானைகளை அழைத்துவரும் வழியில் உள்ள மின்கம்பிகளைக் கவனத்தில் கொண்டு பாதுகாப்பாக கொண்டுவர வேண்டும். கரோனா தடுப்பு வழிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNGovernment elephant METTUPLAYAM camps temple elephant
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe