Skip to main content

யானை தந்தங்களை கைப்பற்றிய வனத்துறை...

Published on 05/11/2019 | Edited on 05/11/2019

கோயம்புத்தூர் வனக்கோட்டம், பெரியநாயக்கன் பாளையம் சரகம், தோலம்பாளையம் கிழக்கு பீட் வனப்பகுதியில் 2017 ஆம் வருடம் டிசம்பர் மாதம் குஞ்சூர்பதி ஊரைச் சேர்ந்த கார்த்திக் குமார், வயது 33, என்ற நபர் தனது ஊருக்கு வெளிப்பகுதியில் இருக்கும் காட்டில் இறந்து கிடந்த ஒரு ஆணையினை பார்த்துள்ளார். 
 

elephant tusks seized


இந்த தகவலை கார்த்திக் குமார் அருகில் உள்ள பெருக்குபதி ஊரைச் சேர்ந்த ஈஸ்வரன், வயது28, என்பவரிடம் தெரிவித்துள்ளார். ஈஸ்வரன் உடன் யானை இறந்த இடத்திற்கு சென்று இரு தந்தங்களை உருவி எடுத்து காட்டிற்குள் மறைத்து வைத்துவிட்டு தந்தங்களை எடுத்த விபரத்தினை குஞ்சூர்பதியைச் சேர்ந்த சின்ன போண்டா என்ற வீரபத்திரன், வயது 20 என்பவரிடம் தெரிவித்து தந்தங்களை விற்க கோவனூரைச் சேர்ந்த மான் என்ற தாமோதரனை  வரச்சொல்லி காட்டில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த தந்தங்களை காண்பித்து உள்ளார்கள். மானும் தந்தங்களை விற்பதற்க்காக தன் செல்போனில் போட்டோ எடுத்து சென்றுள்ளான். 

இந்த தருணத்தில் ஈஸ்வரன் தந்தங்களை விற்பதற்காக கேரளாவில் வேலை செய்யும் பில்லூர் டேம், கோரபதி ஊரைச் சேர்ந்த தங்கராஜ், வயது 34, மற்றும் மங்களகரைபுதூர் ஊரைச் சேர்ந்த அண்ணாச்சி என்ற மோகன் ராஜ், வயது 46 என்பவரிடம் தெரிவித்துள்ளார். 

பின் ஈஸ்வரன் மற்றும் வீரபத்திரன் இருவரும் காட்டிற்குள் சென்று மறைத்து வைக்கப்பட்டு இருந்த தந்தங்களை எடுத்துக் கொண்டு சீலியூர் கிராம வன எல்லைக்கு அருகில் சென்று தங்கராஜ் மற்றும் மோகன்ராஜ் ஆகியோரிடம் காண்பித்து உள்ளார்கள். 

பின்னர் அந்த தந்தங்களை அங்கு மறைத்து வைத்துவிட்டு கணுவாய்பாளையத்தில் இருக்கும் டாஸ்மாக் சென்று மது அருந்தி உள்ளார்கள். மது அருந்தி கொண்டு இருந்த போது தங்கராஜ் மட்டும் வெளியே சென்று வருகிறேன் என்று சொல்லிவிட்டு சென்று அந்த தந்தங்களை திருடி அதை விற்பதற்க்காக கேரளா எடுத்து சென்றுவிட்டார். 

இவர்கள் மூன்று பேரும் பின் அங்கு சென்று பார்த்த போது தந்தங்கள் இல்லை. இந்த தருணத்தில் மான் என்ற தாமோதரன் தந்தங்களை பற்றி ஈஸ்வரன் மற்றும் வீரபத்திரனிடம் கேட்டபோது அது தொலைந்து விட்டதாக சொல்லி இருக்கிறார்கள். 

ஆனால் மான் அதை நம்பாமல் அவர்கள் இருவரும் தந்தங்களை விற்று விட்டதாக கூறி தன் பங்கு பணத்தினை கேட்டு ஆட்களை வைத்து அடித்து உள்ளான். இந்த செயல் பெருக்குபதி மற்றும் குஞ்சூர்பதி ஊர் மக்களுக்கு தெரிய வந்துள்ளது. ஆனால் இது நடந்து ஒன்றரை வருடம் கடந்த நிலையில் தற்போது விஷயம் வெளியே கசிந்து தெரிய வந்த போது உதவி வனப்பாதுகாவலர், கோவை, வனச்சரகர், பெரியநாயக்கன்பாளையம் மற்றும் இதர பணியாளர்கள் 14.10.19  முதல் தீவிர விசாரணை செய்து முதலில் கார்த்திக் குமார், வீரபத்திரன் ஆகிய இருவரை பிடித்து விசாரணை செய்து 29.10.19 அன்று வாக்குமூலங்கள் பெற்று நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்கள். 

பின் கள்ளச்சாராய வழக்கில் சிறையில் இருந்த மானை எடுத்து விசாரனை செய்து வாக்குமூலம் பெற்று 26.10.19 அன்று நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். இந்த நிலையில் ஈஸ்வரன் தேடபட்டு வந்தான். ஆனால் ஈஸ்வரன் மதுக்கரை நீதிபதி முன்பு 1.11.19 அன்று சரணடைந்தார். 


பின் மோகன்ராஜ் என்பவரை பிடித்து விசாரணை செய்ததில் தந்தங்களை தங்கராஜ் என்பவர் தான் திருடி கேரளா எடுத்து சென்றதாகவும் அங்கு விற்க முயற்சி எடுத்து விற்க முடியாததால் அவனிடம் தான் தந்தங்கள் இருக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்ததை அடுத்து சரகர் குழு கொச்சின் சென்று தங்கராஜை பிடித்து அங்கு கிணற்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டு இருந்த தந்தங்களை கைப்பற்றினர். 

பின்னர் தங்கராஜ் மற்றும் மோகன்ராஜ் ஆகியோரை விசாரணை செய்து வாக்குமூலங்கள் பெற்று இன்று (5.11.19) நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள். இரு தந்தங்களின் நீளம் 2 அடி நீளம் கொண்டுள்ளது. இரு தந்தங்களின் எடை சுமார் 5 கிலோ ஆகும்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

யானை துரத்தி வந்ததில் ஆடு மேய்க்கும் தொழிலாளி கீழே விழுந்து படுகாயம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 goat herdsman fell down after being chased by an elephant

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சுட்ட குண்டா, இருளர் வட்டம் பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை (40) இவர் 20க்கும் மேற்பட்ட ஆடு மற்றும் மாடுகளை வைத்து வனப்பகுதியை  ஒட்டியுள்ள விவசாய நிலம் மற்றும் வனப்பகுதியில் தினமும் மேய்த்து வந்துள்ளார். வழக்கம் போல் இன்று ஆடு மாடுகளை வனப்பகுதிக்கு ஓட்டி சென்ற அவர் தமிழக ஆந்திர எல்லையான சுட்டகுண்டாவிலிருந்து பெத்தூர்  செல்லும்  சுனை என்ற வனப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது யானை துரத்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்து ஓட்டம் பிடித்த அவர் கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.

பின்னர் தனது  வீட்டிற்கு செல்போன் மூலம் தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் வனத்துறை மற்றும் உமராபாத் காவல் துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் காயமடைந்த அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கால் மற்றும் முதுகு பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் .

மேலும் ஆம்பூர் வனச்சரக அலுவலர் பாபு மற்றும் உமராபாத் காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story

வெள்ளியங்கிரி மலை ஏறிய இளைஞருக்கு நேர்ந்த துயரம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy befell the young man who climbed the Velliangiri mountain

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது டிரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு, கீழே இறங்கியபோது 7 வது மலையில் திருப்பூரை சேர்ந்த வீரக்குமார் (வயது 31) என்பவர் கடந்த 18 ஆம் தேதி தவறி விழுந்தார். இதனால் அவரின் கை மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

உடல்நலக் குறைவால் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய 7 பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக் உயர்ந்துள்ளது. முன்னதாக சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது எனவும், கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.