elephant trampled Agricultural college student passed away

Advertisment

குமரி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையில் அடர்ந்த வனப்பகுதிகளில் யானை, சிறுத்தை, கரடி, முள்ளம்பன்றி, ஓநாய் உள்ளிட்ட காட்டு மிருகங்கள் அதிகம் உள்ளன. இதில் தடிக்காரன் கோணம், கீரிப்பாறை மலைப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தனியாருக்குச் சொந்தமான கிராம்பு தோட்டங்கள் உள்ளன. இங்கு வெளி மாவட்டங்களில் இருந்து வந்து, ஏராளமான தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி வேலை செய்துவருகிறார்கள். இவர்களின் பயன்பாட்டுக்காக அங்கு கோயில்கள் மற்றும் ஹோட்டல்கள் உள்ளன.

இந்த நிலையில், மாறாமலை எஸ்டேட் அருகில் ஹோட்டல் நடத்திவரும் தடிக்காரன்கோணம், வாளையத்துவயலைச் சேர்ந்த மணிகண்டன் (52), கோவை வேளாண்மைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் அவரதுமகள் ஸ்ரீணா (19) ஆகிய இருவரும், கடந்த மாதம் 20-ம் தேதி மணிகண்டனின் மோட்டார் சைக்கிளில் எஸ்டேட் பகுதியில் இருக்கும் காணிக்கை பெட்டி கோயிலுக்குச்சென்றனர். பின் கோயிலிலிருந்து தனது ஹோட்டலுக்கு, மாமூட்டு எனும் காட்டுவழி குறுக்குப் பாதை வழியாகத் திரும்பினர்.

மாமூட்டு குறுக்குப் பாதையில் சென்றுகொண்டிருந்தபோது அங்கு புதருக்குள் மூன்று யானைகள் நிற்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மணிகண்டன், தனது மோட்டார் சைக்கிளைத் திருப்பி தப்பி ஓட முயன்றார். அதற்குள் ஒரு யானை வேகமாக ஓடிவந்து, மோட்டார் சைக்கிளைத் தும்பிக்கையால் இடித்து கீழே தள்ளியது. இதில் மணிகண்டனும் அவரது மகள் ஸ்ரீணாவும் கீழே விழுந்தனர்.

Advertisment

அந்த யானை, ஸ்ரீணாவின் இரண்டு கால்களையும் மிதித்ததோடு தும்பிக்கையால் அவரைத் தூக்கி வீசியது. இதில் யானையின் பிளறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடிவந்து யானையைத் துரத்தினர். பின்னர் படுகாயத்துடன் மயங்கிய நிலையில் கிடந்த மணிகண்டனையும் ஸ்ரீணாவையும் மீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு ஓரு வாரம் சிகிச்சைக்கு பின்னர் ஸ்ரீணாவை மட்டும் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார்மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிாிவில் வைத்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று (12-ம் தேதி) மாலை சிகிச்சைப் பலனியின்றி ஸ்ரீணா பாிதாபமாக இறந்தார். உலக யானைகள் தினமான நேற்று யானை மிதித்து ஸ்ரீணா இறந்த சம்பவம் குமாி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தடிக்காரன்கோணம், கீாிப்பாறை, மாறாமலை பகுதியில் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.