Advertisment

ஒரே இடத்தில் பலமணி நேரமாக நின்ற யானை... திகைத்த மக்கள்! 

 The elephant that stood in one place for many hours ... stunned people!

Advertisment

பலா பழத்தை உட்கொண்ட மயக்கத்தில் காட்டு யானை ஒன்று பல மணி நேரமாக ஒரே இடத்தில் நின்றிருந்தது பார்ப்போரின் கவனத்தை ஈர்த்தது. மேலும் யானைக்கு உடல்நிலை சரியில்லையோ என்றுஎண்ணவும் தோன்றியது.

நீலகிரி மாவட்டம் நாடுகாணி குடியிருப்பு பகுதியை ஒட்டிய வனப்பகுதியில் காட்டு யானை ஒன்று வெகுநேரமாக ஒரே இடத்திலேயே நின்றிருந்தது. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் சாலையில் நின்று, பல மணி நேரமாக யானை ஒரே இடத்தில் இருப்பதைக் கண்டு திகைத்து நின்றனர். ஒருவேளை யானைக்கு உடல் நிலை சரியில்லாததால் யானை ஒரே இடத்தில் நின்று கொண்டிருக்கலாம் என்று எண்ணிய மக்கள் உடனடியாக இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். யானை நின்று கொண்டிருக்கும் இடத்திற்கு வந்த வனத்துறையினர் அருகே சென்றபோது, அது நல்ல உடல் நிலையுடன் இருப்பது தெரியவந்தது. அதிக பலா பழங்களை சாப்பிட்டதால்ஓய்வு எடுப்பதற்காக யானை ஒரே இடத்தில் நின்று கொண்டிருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

elephant nilgiris
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe