Advertisment

15 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு கிணற்றில் விழுந்த யானை மீட்பு!

 Elephant rescued after 15 hours of struggle

Advertisment

தருமபுரிமாவட்டம் ஏலகுண்டூர்கிராமத்தில், உணவு தேடிவந்தபெண் யானை ஒன்று, 50 அடி ஆழம் கொண்ட கிணற்றில், தவறி விழுந்தயானையை மீட்கும் பணியில், வனத்துறையினர் மற்றும்மீட்புப் படையினர்தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில், 15 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகுதற்பொழுது மீட்கப்பட்டுள்ளது.

கிணற்றில் தவறி விழுந்தயானையை, முதலில் கிரேன் மூலம் வெளியே கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அந்த முயற்சி தோல்வியடைந்தது. அடுத்தபடியாகமயக்க மருந்து செலுத்தி, யானையைவெளியேற்ற வனத்துறை முயற்சி செய்தது. ஆனால், கிணற்றில் ஒருஅடிக்கும் மேலே தண்ணீர் இருக்கும் நிலையில், மயக்க மருந்து செலுத்தப்பட்ட நிலையிலும், தண்ணீரை யானை குடிப்பதால், மயக்கமடைய காலதாமதம் ஏற்பட்டது. மீண்டும், இரண்டாம்முறையாக யானைக்குமயக்க மருந்து செலுத்தி, கிரேன் உதவியுடன் மீட்க முயன்றபோது, கிணற்றின் பக்கவாட்டில் யானை விழுந்தது. ஆனாலும், தொடர் முயற்சியாகவனத்துறை, தீயணைப்பு வீரர்கள்போராடி இறுதியாகயானையை மீட்டனர்.

forest dharmapuri wild elephant
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe