Elephant passes away in coimbatore

கோவை சிறுமுகை வனச்சரகம், மோத்தூர் பெத்திகுட்டை காப்புக்காட்டிற்குள் யானை ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறைக்குத் தகவல் கிடைத்தது.

Advertisment

தகவலின் பேரில் வனத்துறையினர் அங்கு சென்றனர். அப்போது சுமார் 25 வயதுடைய ஒரு பெண் யானை உயிரிழந்து கிடந்தது. யானை எப்படி உயிரிழந்தது என்பதை அறிய யானையின் உடலை சோதனை செய்தனர்.அப்போது, யானையின் பிறப்புறுப்பு இரத்தப்போக்குடன் வீங்கியிருந்தது. கர்ப்பம் அல்லது பிரசவத்திற்குப் பிறகான சிக்கல்கள் காரணமாக பிறப்புறுப்பில் ரத்தப்போக்கு ஏற்பட்டிருக்கலாம் என்றும், அதனால் யானை உயிரிழந்திருக்கலாம் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

Advertisment

மேலும், “பிரேதப் பரிசோதனைக்குப் பிறகுதான் யானை எப்படி உயிரிழந்தது என்பது உறுதிப்படுத்தப்படும்” என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.