டயரில் தீவைத்து யானை மீது வீசிய இருவர் கைது!

nilgiris

நீலகிரி மாவட்டம் மசினங்குடியில்டயரில் தீ வைத்து யானையின் மீது வீசியவீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மசினங்குடி பகுதியில் பல ஆண்டுகளாகச் சுற்றிவந்த யானை ஒன்று கடந்த மூன்று மாத காலமாக முதுகில் காயத்துடன் சுற்றித் திரிந்தது. தொடர்ந்து வனத்துறையினர் சிகிச்சை அளித்த போதிலும் அதனுடைய காதில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. தொடர்ந்து யானைக்கு சிகிச்சை அளிக்க வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தியபோது யானை இறந்தது. உயிரிழந்த யானையின் உடலைபிரேதப் பரிசோதனை செய்தபோது யானையின் முதுகின் மீதும், காதின் மீதும்தீக்காயம் இருப்பது கண்டறியப்பட்டது.

இந்நிலையில் டயரில் தீயைக் கொளுத்தி யானையின் முதுகில் வீசும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ரிசார்ட் உரிமையாளர் ரைமன், பிரசாந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

arrest elephant fire nilgiris
இதையும் படியுங்கள்
Subscribe